சாலைவிபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சென்னை வடமண்டல குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் லலிதாவின் மருத்துவ செலவிற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கினார்.
சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் லலிதா நடராஜன் கடந்த 9.8.2023 அன்று சென்னையில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில், சென்னை, தேனாம்பேட்டை, அப்போலோ மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிசிக்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லலிதா நடராஜனை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து, அவரது கணவரிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

இதையடுத்து லலிதா நடராஜனின் சிசிக்சைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 இலட்சம் ரூபாய் ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார்கள். இதற்கான காசோலையினை லலிதா நடராஜனின் இளைய சகோதரர் . என்.கணேஷிடம் நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கினார்.