நாட்டின் மினி லோக்சபா தேர்தலாக கருதப்படும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன.403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தம் 61.04% வாக்குகள் பதிவாகி இருந்தது. 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் தேர்தலில் மொத்தம் 71.95% வாக்குகள் பதிவாகின.
70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநில தேர்தலில் 65.37% வாக்குகள் பதிவாகின.40 இடங்களைக் கொண்ட கோவாவில் 79.61% வாக்குகள் பதிவாகின. 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் தேர்தலில் சுமார் 74% வாக்குகள் பதிவாகின. இத்தேர்தல்களில் பதிவான அனைத்து வாக்குகளும் நாளை எண்ணப்படுகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை பிரதான கட்சிகள். பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, அகாலிதளம், பாஜக கூட்டணி களத்தில் உள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.
மணிப்பூரில் பாஜக, காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி, நாகா மக்கள் முன்னணி, மக்கள் தேசிய கட்சி, களத்தில் நிற்கின்றன. கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை களம் காண்கின்றன.இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.