திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதைக் கண்டித்து (ADMK PROTEST) ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னால் சட்டமன்ற உறுப்பினர் தென்னம்பட்டி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வேதனையாச்சி வேதனையாச்சி விடியா திமுக ஆட்சியில் வாக்களித்த மக்களின் வாழ்க்கையோ வேதனையாச்சி வேதனையாச்சி
இதில் சீரழியுது சீரழியுது கொலை கொள்ளை போதைப் பொருள்கள் வழிப்பறி உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் தமிழ்நாடு சீரழியுது.
பதவி விலகு பதவி விலகு , போதைப் பொருள் கட்டுப்படுத்தாத , ஸ்டாலின் அரசு பதவி விலகு என்று வாசகத்துடன் பதாகைகள் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
Also Read : https://itamiltv.com/sp-velumani-urges-to-tncm-should-take-action-on-drug-issue/
மேலும் இந்த போராட்டத்தில் அதிமுக நகர செயலாளர் நடராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என (ADMK PROTEST) சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு போதைப்பொருள் பிடியில் சிக்கி இருக்கும் தமிழகத்தை மீட்க போர் குரல் எழுப்பினர் .