சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஊர் தலைவர் இல்ல திருமண விழாவிற்கு 5 கிராம மக்கள் ஒன்று கூடி 500 கிடாவுடன், லாரியில் மணமக்களுக்கு சீர்வரிசை செய்து ஊரையே வியந்து பார்க்க வைத்த நிகழ்வு அரங்கேறி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே குன்னத்தூரில் சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பொன்மணி பாஸ்கரன் வசித்து வருகிறார்.இவரது மகள் ஹரிப்பிரியாவுக்கும் ஜெயகுமார் என்பவருக்கும் கடந்த வாரம் சென்னையில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக தங்களது சொந்த ஊரான குன்னத்தூரில் உள்ள மணமகள் வீட்டிற்கு மணமக்கள் வந்திருந்தன. அப்போது மணமக்களுக்கு எஸ் புத்தூர்அம்மன் செட்டி பாளையம், மனப்பட்டி ,முத்தம் பட்டி, உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து,
டன் கணக்கில் பலன்கள், காய்கறிகள், பித்தளை பாத்திரங்கள் தட்டு வரிசைகள் மற்றும் 500 கிடாக்களை அழைத்துக் கொண்டு உடைகள் ,அலங்கார பொருள்கள் நகைகள், 350 தட்டுகளில் மாலைகள் மேல் தாளங்கள் முடங்க ஊர்வலமாகக் கொண்டு வந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மேலும் சீர் வரிசையுடன் வந்த கிராம மக்களை மணமக்கள் வீட்டார் ஆரத்தி எடுத்து வரவேற்றன தென் மாவட்டங்களில் மாமன் சீர்வரிசை கொண்டு வருவது வழக்கம் நகரப் பகுதிகளில் தான் தங்களால் முடிந்த பரிசுப் பொருட்களையும் பணத்தையும் மொய்யாக எழுதுவதைப் பார்த்திருப்போம்.
ஆனால் ஐந்து கிராம மக்கள் ஜாதி மத பேதமின்றி எங்கள் ஊர்த் தலைவர் திருமணம் எனக்குக் கூறி சீர்வரிசைகளை தங்களது குடும்பக் குடும்பமாக எடுத்துக் கொண்டு வந்து மணமக்களை வாழ்த்திய சம்பவம் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது