வங்கி பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே மேற்கொள்ளுங்கள் – வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

6-days-of-bank-holidays-occurring-in-remaining-8-days
6 days of bank holidays occurring in remaining 8 days

டிசம்பர் மாதம் முடிய இன்றும் 8 நாட்களே உள்ள நிலையில் அதில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி டிசம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 26 ஆம் தேதி ஞாயிறு விடுமுறை, டிசம்பர் 27ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், டிசம்பர் 30 ஆம் தேதி யூ கியாங் நங்பா பண்டிகை, மற்றும் டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு தொடக்கம் என விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறைகள் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது சில இடங்களில் பிராந்திய அளவில் மட்டுமே விடுமுறை இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. உதாரணமாக, யூ கியாங் நங்பா பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 30ஆம் தேதி சில்லாங் பகுதியில் மட்டும் விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இதே பண்டிகைக்காக இமாச்சலப் பிரதேசம் முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது.

6-days-of-bank-holidays-occurring-in-remaining-8-days
6 days of bank holidays occurring in remaining 8 days

எனவே பிராந்திய அளவில் மாநில அளவில் வங்கி விடுமுறை மாறுபடும் என்றும் கூறப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டலும் ஆன்லைன் சேவைகள், ஏடிஎம் போன்ற வசதிகள் தொடர்ந்து நடைபெறும்.

எனவே வங்கி விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதன்படி திட்டமிட்டு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Total
0
Shares
Related Posts