நாகை அருகே 60 அடி நாகம் குடைப்பிடித்து கலசத்தை காப்பது போன்ற தோற்றத்தை உடைய அருள்மிகு காருகுடி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது;
நாகை மாவட்டம்,திருக்குவளை அடுத்த காருகுடி கிராமத்தில் 60 அடி நீளம் உள்ள நாகம் குடை பிடித்து கலசத்தை காப்பது போன்ற தோற்றத்தில் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் ஆலயம் புதிதாக கட்டப்பட்டது.
எங்கும் இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக சுயம்புவாக காட்சி அளிக்கும் மகாமாரியம்மன் ஆலயத்தில் கம்பீரமாக ஆலயத்தை காத்து நிற்கும் மதுரை வீரன் மற்றும் புற்று-யில் உருவெடுத்த நாகம்மன் உடன் அமைக்கப்பட்டுள்ள இக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பிப் 1 ம் தேதி விக்னேஸ்வர பூஜைகளுடன் துவங்கியது.
தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடர்ந்து அதனை தொடர்ந்து இன்று 2ம் கால யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனைக்கு பிறகு கடம் புறப்பாடு நடைப்பெற்றது. மங்கலவாத்தியங்கள் மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசத்தை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
தொடர்ந்து 60 அடி நீளம் உள்ள நாகம் குடை பிடித்த ஆலயத்தை கருட பகவான் சுற்றிவர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து அருள்மிகு மகா மாரியம்மன், ஸ்ரீ நாக விநாயகர், ஸ்ரீ நாகம்மன், ஸ்ரீ மதுரை வீரன், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலசனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது .
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.