மத்தியப் பிரதேச மாநிலத்தில் இறந்து போன தனது இரண்டு வயது தம்பியின் உடலை, மடியில் வைத்துகொண்டு ஆம்புலன்ஸ்சுக்காக காத்திருந்த 8 வயது சிறுவனில் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதை பதிக்க வைத்துள்ளது.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 450 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது மொரோனா மாவட்டம். இங்குள்ள மாவட்ட மருத்துவமனையில் அம்பா என்ற பகுதியைச் சேர்ந்த பூஜாராம் என்பவர் ஈரல் தொடர்பாக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட தனது 2 வயது மகனை சிகிச்சைக்காக அனுமத்தித்துள்ளார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அந்த சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்து செல்ல அம்புலன்ஸை ஏற்படு செய்ய முயற்சித்துள்ளார். இவரின் கிராமம் மருத்துவமனையில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ளதால் மருத்துவமனை தரப்பு பூஜாராமிடம் இலவச ஆம்புலன்ஸ் சேவை தற்போதைக்கு இல்லை என கைவிரித்துள்ளது.
தனியார் ஆம்புலன்ஸ்சை ஏற்பாடு செய்யும் அளவிற்கு பூஜா ராமிற்கு வசதி இல்லாததால், தனது மற்றொரு மகனான குல்ஷானிடம் இரண்டு வயது மகனின் உடலை ஒப்படைத்து விட்டு மாற்று ஏற்பாடுக்காக அருகே சென்றுள்ளார்.
இந்த நிலையில் தனது இரண்டு வயது தம்பியின் உடலை மடியில் வைத்துக்கொண்டே 8 வயது சிறுவன் குல்ஷான் தந்தையின் வருகையை எதிர்பார்த்து அரை மணிநேரத்திற்கும் மேலாக பொது வெளியில் அமர்ந்துள்ளார். இந்த காட்சி தற்போது வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
இந்நிலையில், இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி யோகந்திரா சிங் உடலை பூஜாராம்மின் சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்சை ஏற்பாடு செய்து உதவியுள்ளார்.
ये दर्दनाक तस्वीर भावुक भी कर रही है और मध्यप्रदेश में स्वास्थ्य व्यवस्थाओं पर गुस्सा भी दिला रही है।
मध्यप्रदेश में एक आठ साल के बच्चे की गोद में अपने छोटे भाई का शव है और पिता एम्बुलेंस खोजने निकले हैं।
यही है पीएम मोदी की व्यवस्थाओं का सच! pic.twitter.com/Dt708Xy5JH
— Congress (@INCIndia) July 10, 2022