சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை பெறவும் 17 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் .
முதற்கட்டமாக சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ;பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முதலீடுகளை பல ஆயிரம் கோடிக்கான ,முதலீடுகளை இருக்கும் முயற்சியில் இறங்கினார் இதில் சில முதலீடுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அப்போதே கையெழுத்தானது.
Also Read : பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்த சிலை அமெரிக்காவில் இருந்து மீட்பு..!!
இதையடுத்து தற்போது சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 3 நிறுவனங்களுடன் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
செங்கல்பட்டில் ரூ.500 கோடியில் லிங்கன் எலக்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தின் விரிவாக்கம்
காஞ்சிபுரத்தில் ரூ.100 கோடி மதிப்பில் விஷய் பிரிஷிஷன் & டிரான்ஸ்டியூசர்ஸ் உற்பத்தி மையத்தை நிறுவ ஒப்பந்தம்
சென்னை மற்றும் கோவையில் ரூ.250 கோடியில் விஸ்டியன் நிறுவனத்தின் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.