ஆந்திர மாநிலத்தில் அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 9 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடத்துநர், ஓட்டுநர் மற்றும் 24 பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்து ஜனகரெட்டி கூடம் பகுதியில் ஏலூர் அருகே ஆற்றைக் கடப்பதற்காக பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேரூந்து நீரில் மூழ்கியது.
இந்த விபத்தில் இதுவரை 5 பெண்கள் உள்பட 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை தீயணைப்புத்துறையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.