அதிக செலவு மிக்க நாடுகளில் ஒன்றான லண்டனில் சிக்கனமாக வாழ்ந்து 24 வயதில் 83 லட்சம் சேமித்துள்ள இளம் பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
40 வயதிற்குள் 11 கோடி மதிப்புள்ள பிரம்மாண்ட வீட்டை வாங்கி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓய்வு பெற்று நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டுமென சிக்கனமாக வாழ்ந்து 24 வயதில் சுமார் 83 லட்சம் ரூபாயை சேமித்துள்ளார் லண்டனை சேர்ந்த மியா மெக்கர்த் என்ற இளம்பெண்.
Also Read : இதில் எங்களுக்கு என்ன லாபம்..? – உக்ரைனை கைவிடுகிறதா அமெரிக்கா..?
இத்தனை இளம் வயதில் கண்பார்க்கும் அனைத்தையும் வாங்க துடிப்பவர்கள் மத்தியில் வீட்டில் தயாரித்த உணவுகளை மட்டுமே உண்ணும் மியா மெக்கர்த் , காபி, தண்ணீருக்காக கூட வெளியில் செலவழிப்பதில்லையாம் .
இதுபோன்று பல தியாகங்களை செய்தால்தான் பிற்காலத்தில் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் எனவும் மியா தெரிவித்துள்ளார். மியாவின் இந்த பிரம்மாண்ட ஆசைக்கும் அதற்காக அவர் எடுக்கும் கடுமையான முயற்சிக்கும் தற்போது பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.