Yercaud : ஏற்காட்டில் இருந்து தனியார் பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
ஏற்காடு மலைப்பாதையில் தனது பயணத்தைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் நிலை தடுமாறிய ஓட்டுநர் வண்டியைத் தாறுமாறாகத் திருப்பினார். அப்போது பேருந்து மலைப்பாதையின் 11வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்ததால் தனது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து சுமார் 50 அடி ஆழப் பள்ளத்தில் விழுந்தது.
பள்ளத்திற்குள் விழுந்ததில் பேருந்தில் இருந்த பயணிகள் படுகாயமடைந்தனர், மேலும் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்டு வந்த சுற்றி இருந்தவர்கள் விபத்து குறித்து அருகிலிருந்த காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மீட்பு படையினரின் உதவியுடன் பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர், இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் Yercaud.
மேலும் இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் , 2 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : மே தினமும் சென்னையும்… ஒரு சுவாரஸ்ய தகவல்!