pakistan boxer : பாரிஸ் ஒலிம்பிக் போட்டி தகுதி சுற்றில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ள பாகிஸ்தானை சேர்ந்த குத்துசண்டை அணியில் இடம்பெற்றிருந்த வீரர் ஒருவர் சக வீராங்கனையின் பணத்தை திருடி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த 5 வீரர், வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி குத்துச்சண்டை தகுதி சுற்றில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ளனர். இவர்களில் ஜோஹைப் ரஷீத்தும் ஒருவர்.
ஜோஹைப் ரஷீத் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ந்திருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் குத்துச்சண்டை அணியைச் சேர்ந்த வீராங்கனை லாரா இக்ரம் பயிற்சிக்காக தனது அறையில் இருந்து சென்றுள்ளார். அப்போது அவரது அறைக்கு யாருக்கும் தெரியாமல் வந்த ஜோஹைப் ரஷீத், லாரா இக்ரமின் வைத்திருந்த வெளிநாட்டு பணத்தை திருடிச் சென்றுள்ளார்.
பயிற்சியை முடித்து தனது அறைக்கு வந்த லாரா தனது அறை திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் . பின்னர் இதுகுறித்து அவர் தங்கள் அணியிடம் கூற பாகிஸ்தான் குத்துச்சண்டை கூட்டமைப்பு சார்பில் தற்போது இத்தாலி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி காணாமல் போன ஜோஹைப் ரஷீத்து குறித்தும் இத்தாலியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக முதற் கட்ட தகவல் வெளியாகி உள்ளது .
குத்துச்சண்டையில் தனது நாட்டிற்கு (pakistan boxer) பதக்கங்களை வேற்று கொடுத்த வீரர் ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.