புதுச்சேரியில் பெண்கள் அனைவருக்கும் இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு புதிய அறிவிப்புக்களை வெளியிட்டு வருவதோடு, பல்வேறு நலத்திட்டங்ககளையும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் பெண்களுக்கு பேருந்துகளில் டிக்கெட் இல்லாத இலவச பயணம் செய்யும் வசதி ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் பெண்கள் மட்டும் பயணம் செய்ய பிங்க் நிற பேருந்து இயக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை புதுச்சேரி அமைச்சர் சந்திரா பிரியங்கா தெரிவித்துள்ளார்.
நவீனவசதிகளுடன் பெண்களுக்கான இலவச பிங்க் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்த அமைச்சர், மேலும் பெண்களுக்காக 200 இலவச பேருந்துகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பயணிகளுக்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பேருந்துகளில் ஜிபிஎஸ், சிசிடிவி வசதிகள் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார்.