ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகளாக பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்த முதியவர் இன்று உயிரிழந்துள்ளார்.
பிரேசில் நாட்டை சேர்ந்த வால்டர் ஒர்த்மேன் என்ற முதியவர் ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகளாக பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்தார் . இவரது இந்த கின்னஸ் சாதனை பலராலும் கவரப்பட்டு உலகம் முழுவதும் பிரபலமானார்.
தனது 15 வயதில் குடும்ப சூழல் காரணமாக ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இவர், 100 வயது வரை அதே நிறுவனத்தில் உழைத்து பணி ஓய்வு பெற்றுள்ளார் . வால்டர் ஒர்த்மேன் படைத்த இந்த சாதனை இன்றைய கால இளசுகளுக்கு பாடமாக இருந்தது.
இந்நிலையில் பணி ஓய்வு பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வந்த வால்டர் ஒர்த்மேன் தனது 102 வயதில் இன்று காலமாகி உள்ளார்.
வால்டர் ஒர்த்மேனின் மறைவுக்கு தற்போது உள்நாடு மாற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.