ஜார்க்கண்டில் முதல் மனைவியுடன் (wife) சேர்ந்து திட்டம் போட்டு 2-வது மனைவியை கூலிப்படை வைத்து கணவரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டின் சாய்பாசா நகரில் பசதொந்தோ கிராமத்தில் சோக்ரா பன்ரா என்ற நபர் வசித்து வந்துள்ளார். இவரது முதல் மனைவி (wife) சுனிதா பன்ரா. இந்நிலையில், சோக்ரா பன்ரா, 28 வயதாகும் சோம்வாரி பன்ரா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், 2-வது மனைவியுடன் சோக்ராவுக்கு சுமுக உறவு நீடிக்காமல் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனை பயப்படுத்திக் கொண்ட முதல் மனைவி சுனிதா இதுவே தக்க சமயம் என நினைத்து சோம்வாரி பன்ராவை கொலை செய்ய கணவருக்கு திட்டம் தீட்டி கொடுத்து உள்ளார்.
அதன்படி, ரூ.5 ஆயிரம் பணம் கொடுத்து கூலிப்படையை வைத்து 2-வது மனைவியை சோக்ரா கொலை செய்துள்ளார்.
இந்நிலையில், சோம்வாரி பன்ராவின் உடலை ஆடு மேய்த்தவர்கள் சிலர் பார்த்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அங்கிருந்த கிணறு ஒன்றில் இருந்து சோம்வாரி பன்ராவின் உடலை மீட்டனர்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சோக்ராவும் அவரது முதல் மனைவியையும் சேர்ந்து சோம்வாரி பன்ராவை கூலிப்படை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.
மேலும், இந்த தம்பதி, சோம்வாரியை தினமும் கொடுமைப்படுத்தி வந்ததும், சம்பவத்தன்றும், அவரை அடித்து துன்புறுத்தியதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கூலிப்படையை சேர்ந்த ரவி ரோஷன் பூர்த்தி (19), கம்லேஷ் பூட்டியா (21) ஆகிய இருவரையும் கொலை செய்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்தனர்.