இத்தாலியில் குப்பையில் கிடந்த ஓவியத்தால் ஒருவர் கோடீஸ்வரரான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இத்தாலி நாட்டில் கேப்ரி பகுதியில் பழைய பொருட்களை சேகரிக்கும் தொழிலாளியான லுங்கி லோ ரோஸா 1962-ல் தனக்குக் கிடைத்த ஒரு அழகிய ஓவியத்தை தனது வீட்டில் மாட்டிவைத்துள்ளார்.
இந்நிலையில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பின் தற்போது அந்த ஓவியத்தை பரிசோதனை செய்த மகன் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார் . தனது தந்தை பல வருடங்களுக்கு முன் குப்பையில் இருந்து எடுத்து வந்தது பிரபல ஓவியர் பிக்காஸோ வரைந்த ஓவியமாம்.
Also Read : வேட்டையன் விவகாரம் : உடனடி உத்தரவு பிறப்பிக்க மறுத்த உயர்நீதிமன்றம்..!!
தந்தை லுங்கி லோ ரோஸாவுக்கு பிக்காஸோ யார் என தெரியாததால் இதன் மதிப்பு குறித்து அவருக்கு தெரியவில்லை. இந்நிலையில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின் லுங்கியின் மகன் அது பிக்காஸோவின் ஓவியம் என கண்டுபிடித்துள்ள நிலையில் இந்த ஓவியத்தை வாங்க பலரும் போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றனர் .
இந்த ஓவியத்தின் தற்போதைய மதிப்பு 50 கோடி ($6 மில்லியன்) என தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் எப்போது இந்த ஓவியத்தை விற்றாலும் அவர் கோடீஸ்வர ஆவதில் எந்த மாற்றமும் இல்லை என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.