passenger ran naked : சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு நாடான அபுதாபிக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணி ஒருவர் திடீரென தனது ஆடைகளை கலைந்து விட்டு நிர்வாணமாக ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு நாடான அபுதாபிக்கு செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர்.
அப்போது பயணிகள் உடைமைகள் சோதனை முடிந்து குடியுரிமை சோதனைக்கு சென்று கொண்டு இருந்தனர்.
அந்த சமயத்தில் அமெரிக்க குடியுரிமை பெற்ற 47 வயதாகும் பெத்தனன் இளங்கோ என்ற பயணி, அந்த விமானத்தில் தனது தந்தையுடன் அபுதாபி வழியாக அமெரிக்கா செல்வதற்காக வந்திருந்தார்.
அப்போதுதான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அவரும், அவரது தந்தையும், குடியுரிமை சோதனைக்கு நடந்து சென்றபோது விமான நிலையத்தில் வைத்து திடீரென பெத்தனன் இளங்கோ தனது ஆடைகளை கலைந்து நிர்வாணமாக ஓடியுள்ளார் passenger ran naked.
அதனைக் கண்டு அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : மாணவர்களுக்கு “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” திட்டம் – தமிழக அரசு!
உடனடியாக விமான நிலைய அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் அங்கு வந்து நிர்வாணமாக ஒடிய பயணியை சூழ்ந்து கொண்டு அவரை கட்டாயப்படுத்தி, ஆடைகளை மீண்டும் போடச் செய்தனர்.
இதுதொடர்பாக அந்த பயணியின் தந்தையிடம் விசாரித்த போது, தன்னுடைய மகன் தற்போது இருக்கும் மன அழுத்தம் காரணமாக தான் இதுபோல் செய்து விட்டதாக கூறினார்.
ஆனால், விமான நிறுவனம், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட பயணியை விமானத்தில் பயணிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி விட்டனர்.
பின்னர், தந்தை-மகன் இருவரது விமான பயணத்தை ரத்து செய்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து உடல் நலம் தேறிய பின் மீண்டும் பயணிக்கும்படி அதிகாரிகள் கூறி,
தந்தை-மகன் இருவரையும் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் மீண்டும் மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், அந்த பயணி மதுரையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து தான் அமெரிக்கா செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.