Parrot astrologer arrested : வருகிற ஏப்ரல் 19 நாடாளுமன்றத் தேர்தலில், பிரபல சினிமா இயக்குநர் தங்கர்பச்சான் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இதற்காக, கடலூர் ஒன்றியம் தென்னம்பாக்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தங்கர்பச்சான்.
அப்போது தென்னம்பாக்கம் அழகு முத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி ஜோசியம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவர், தன்னிடம் ஜோதிடம் பார்க்கும்படி தங்கர்பச்சானிடம் கேட்டுள்ளார்.
அதற்கு சம்மதம் தெரிவித்து அங்கு அமர்ந்து கிளி ஜோசியம் பார்த்தார் தங்கர்பச்சான். அப்போது கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று வந்துள்ளது.
அதனினைப் பார்த்து மகிழ்ந்த தங்கர்பச்சான், அவருக்கு நன்றி கூறிவிட்டு, விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்குச் சென்று, மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதையும் படிங்க : தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!!
இந்நிலையில், தங்கர்பச்சானுக்கு கிளி சோதிடம் பார்த்த செல்வராஜ் என்பவரை, கிளியை கூண்டிற்குள் அடைத்து கொடுமைப்படுத்தியதாக, தமிழக அரசின் வனத்துறை கைது செய்துள்ளது Parrot astrologer arrested.
அதையடுத்து, பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான், இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது என்றும்,
திமுக அரசின் பழிவாங்கும் போக்குக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன.
அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது.
அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :காங்கிரஸின் சாதிவாரி கணக்கெடுப்பு வாக்குறுதி மோசடி : ராமதாஸ் விமர்சனம்!!