கேரளாவில், விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்த கர்ப்பிணி (pregnant) பெண்ணின் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் பத்திரமாக மீட்டு, தாய்க்கும் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர்.
பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் வயதில் உள்ள கர்ப்பிணி அல்லாத பெண்களை விட காய்ச்சல் வந்தால் மிகவும் நோய்வாய்ப்படுவார்கள்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட மனிஷா என்ற பெண். இவர், திருவண்ணாமலையில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இதனையடுத்து, எட்டு மாத கர்ப்பிணியான (pregnant) இவருக்கு திடீரென விஷகாய்ச்சல் ஏற்ப்பட்டது.
இதனால், கடுமையாக பாதிக்கப்பட்ட மனிஷா சுயநினைவை இழந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கடுமையான மூளைக்காய்ச்சல், மூளை அழற்சி, சுவாச செயலிழப்பு இருப்பதை கண்டுபிடித்து உடனடியாக குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்தனர்.
அதன் படி அறுவை சிகிச்சை மூலம் பிறந்த 8 மாத ஆண் குழந்தையை 14 நாட்கள் பராமரிப்பு பிரிவில் வைத்து பராமரித்தனர்.
தொடர்ந்து, தாய் மனிஷாவுக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவ குழுவால், தொடர்ந்து 44 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து, மருத்துவர்களின் உயரிய சிகிச்சையால் 44 நாட்களுக்கு பிறகு தாயும், சேயும் நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.