புதிய தலைமுறை தொலைக்காட்சி நெல்லை கேமராமேன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, இந்தியா விண்வெளி ஆராச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திராயன் 3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் நேற்று மாலை நிலவில் தரையிரங்கியது.
இந்த நிலையில் இந்த நிகழ்வை சிறப்பு நேரலை செய்ய அனைத்து தொலைக்காட்சிகளும் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிலையில் சிறப்பு நேரலை வழங்குவதற்காக சென்ற தலைமுறை ஒளிப்பதிவாளர் சங்கர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
சந்திரயான் 3 விண்கலம் தரை இறங்கும் நிகழ்வை நேரலையில் வழங்குவதற்காக புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் சங்கரும் அவருடன் செய்தியாளர் நாகராஜூம் திருவனந்தபுரத்திற்கு காரில் சென்றுள்ளனர்.
நேற்று மாலை சந்திரியான் தொடர்பான நேரலையை முடித்து அவர்கள் நெல்லை திரும்பி உள்ளனர். வாகனத்தை ஒளிப்பதிவாளர் சங்கரே ஓட்டி வந்து போது எதிர்பாதார விதமாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒளிப்பதிவாளர் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடன் பயணித்த செய்தியாளர் நாகராஜ் மற்றும் மற்றொரு தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வள்ளிநாயகம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் இருவரும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்தில் மரணம் அடைந்த ஒளிப்பதிவாளர் சங்கருக்கு மனைவி மற்றும் 5 வயதில் மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் நைட் ஷிப்ட் முடித்து தொடர்ந்து மறுநாளும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நேற்று தனது மகனின் பிறந்தாள் விழாவில் பங்கேற்க ஒளிப்பதிவாளர் சங்கர் ஆர்வமாக வீட்டிற்கு திரும்பி உள்ளார். இந்த நிலையில் விபத்தில் சிக்கி சங்கர் உயிரிழந்த செய்தி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.