தூத்துக்குடி மாவட்டம் தோப்பூரில் பள்ளிக்கு வெளியே வெடி வெடித்த சத்தம் (explosion) கேட்டு அதிர்ச்சியில் மாணவன் மயங்கி விழுந்த நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் அருகே, தோப்பூர் பகுதியில் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், அங்கு ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் தோப்பூர் ஐ சேர்ந்த சிவபெருமானின் மகன் அஜய் குமார் தன்னுடன் பயிலும் மாணவர்கள் பிரபாகரன் மற்றும் ஆதி ஆகியோருடன் பள்ளி தலைமை ஆசிரியரை சந்திப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது, திடீரென பயங்கரமாக கேட்ட வெடிச் சத்தத்தில் (explosion) பீதியடைந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தோப்பூர் பகுதி மக்கள் அனைவரும் வெளியில் வந்து பார்த்த போது பள்ளி மாணவன் அஜய்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி கிடந்துள்ளார்.
இதனையடுத்து, வெடி வெடித்து தான் மாணவர் மயங்கி விழுந்து காயம் அடைந்ததாக நினைத்து தோப்பூர் பகுதி மக்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவரின் பெற்றோர் ஆகியோர் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த
நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவர் பரிதாமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செந்தூர் டிஎஸ்பி ஆவுடையப்பன் தலைமையிலான போலீசார் தனியார் மருத்துவமனையில் மாணவன் காயம் அடைந்தது குறித்து பள்ளி ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.