உத்தரப்பிரதேச மாநிலத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தாய்க்கு 30 ஆண்டுகளுக்குப் ( uttar pradesh ) நீதி பெற்றுக் கொடுத்த மகனின் செயல் அனைவரலாலும் பாராட்டப்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 1994ல் தனது 12 வயதில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் ஒருவர், தன்னுடைய மகனின் உதவியுடன் வழக்கு தொடர்ந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளார்
பாலியல் வன்கொடுமைக்கு பிறகு பிறந்த ஆண் குழந்தையை உறவினரிடம் கொடுத்துவிட்டு இவருக்கு வேறு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு அந்த மகன் உண்மையை தெரிந்துகொண்டு தனது தாய்க்கு நீதி கிடைக்க உதவியுள்ளார்.
எத்தனை வருடங்கள் ஆனாலும் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்னதற்கேற்ப இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் தலா 30,000 அபராதம் விதித்து நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெற்ற தாய்க்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்க வேண்டும் என போராடி 30 ஆண்டுகளுக்குப் ( uttar pradesh ) பின் குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்று தனது மகனின் செயல் நாட்டு மக்கள் அனைவரலாலும் பாராட்டப்பட்டு வருகிறது.