தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை – நெல்லை இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் 12 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது , வெளி ஊரில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் , சிறப்பு ரயில்கள் என பல வசதிகளையும் , பாதுகாப்பு வழிமுறைகளையும் மாநில அரசுகள் துரிதமாக மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை – நெல்லை இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாளை(நவ.9) சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (06067) மதியம் 2:15க்கு நெல்லை சென்றடையும்; மறுமார்க்கமாக மதியம் 3 மணிக்கு நெல்லையிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் (06068) இரவு 11.15க்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.