கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மக்கள் திடீர் போராட்டம் (Sudden Protest).. வெளியேறும் பேருந்துகள் சிறைபிடிப்பு..
ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து முனையம் சென்னை கிளாம்பாக்கத்தில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.397 கோடி மதிப்பில் 2018-ம் ஆண்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டது. கோயம்பேடு போல் இல்லாமல், பேருந்துகளை நெரிசல் இன்றி நிறுத்தவும், பயணிகள் எளிதாக பயணம் செய்யும் வகையிலும் சூர்ய கதிர்கள் உதயம் போல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில், 130 அரசு பஸ்கள், 85 தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பயணிகள் செல்ல வசதியாக 3 ஆயிரத்து 500 மாநகர பேருந்துகள் செல்ல மேற்கூரையுடன் கூடிய நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.
6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் தரைத் தளம், முதல் தளத்துடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் 260 கார்கள், 568 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும் 2-வது அடித்தளத்தில் 84 கார்கள், 2 ஆயிரத்து 230 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.
இந்த பேருந்து நிலையத்தில் 100 கடைகள், 4 உணவகங்கள், துரித உணவகங்கள் பயணச்சீட்டு வழங்கும் இடம், மருத்துவ மையம், தாய் பால் ஊட்டும் அறை, ஏ.டி.எம். அறைகள், 540 கழிப்பறைகள், கண்டக்டர்கள், டிரைவர்கள் ஓய்வெடுக்கும் அறைகள், 4 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 12 இடங்களில் குடிநீர் வசதிகள் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன.
இதையும் படிங்க : https://itamiltv.com/pongal-gift-package-should-also-be-given-in-cash-insists-ttv-dhinakaran-1000-cash-amount-will-it-come-wont-you-come/
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் திருச்சி மண்டலம், கோவை மண்டலம், சேலம் மண்டலம், மதுரை மண்டலம், திருநெல்வேலி மண்டலம் என தமிழ்நாட்டில் 90 சதவீத பேருந்துகள் இப்போது செல்ல தொடங்கி உள்ளன. இந்த பேருந்துகள் எல்லாம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்ல வேண்டும் என்றால், வண்டலூர் பூங்கா சிக்னலில் திரும்பி உள்ளே வர வேண்டும்.
அதேநேரம் சென்னையில் இருந்து வரும் பேருந்துகள் நேரடியாக உள்ளே வர முடியும். சர்வீஸ் சாலையை முழுமையாக அரசு பேருந்துகள் பயன்படுத்துவதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் வழக்கத்தை விட அதிகமாகி உள்ளது. இதனால் சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் முதல் நாளே குற்றம்சாட்ட தொடங்கினர்.
இந்நிலையில் இன்று காலை திடீரென (Sudden Protest) கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அரசு பேருந்துகளை முற்றுகையிட்டும், சிறைபிடித்தும் போராட்டத்தில் குதித்தனர். ஏனெனில் சர்வீஸ் சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளகிருப்பதாகவும், பேருந்துகள் செல்வதால் சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
சர்வீஸ் சாலையில் பள்ளி இருப்பதால் விபத்து ஏற்படும் என்ற அபாயம் இருப்பதாக கூறி கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் அரசு பேருந்துகளை சிறைபிடித்த மக்கள் அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த இடம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது .