தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது.
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலில் உள்ள 10-க்கும் மேற்ப்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி சீட்டுக்கட்டுபோல் சரியா தொடங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் தற்போது அதை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் . இதன்காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மீட்பு மற்றும் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்களும் தாமதம் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது.