தூத்துக்குடியில், திருநங்கைகளை சில இளைஞர்கள் தாக்கி, அவர்களது கூந்தலை அறுத்துக் கொடுமைப்படுத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, இளைஞர்கள் சிலர் திருநங்கைகளைத் தாக்கி, அவர்களது கூந்தலை அறுத்துக் கொடுமைப்படுத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில்,
இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கழுகு மடை அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதனை, மற்றொரு நபர் வீடியோ எடுக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து பலரும் திருநங்கைகளைத் தாக்கிய நபர்களைக் கைது செய்ய வேண்டுமென சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழகக் காவல்துறை இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.
காணொளியில் கண்ட இரண்டு நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்மண்டல ஆஸ்ரா கர்க், காவல்துறைத் தலைவர், கூறியுள்ளார்.
Couple of trans women attacked by this goons @tnpoliceoffl @CityTirunelveli @TUTICORINPOLICE @sivagangapolice @mducollector @maduraipolice .Break your silence pic.twitter.com/HHwGuTJtI2
— GRACE BANU (@thirunangai) October 12, 2022