திருமணத்தில் (wedding) மனைவி நடனமாடியது பிடிக்காத கணவர் மனைவியை அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள பைகாபாடா கிராமத்தை சேர்ந்த 35 வயதாகும் ராமச்சந்திர சிங் என்ற நபரும் அவரது மனைவி ஷர்மிளா சிங் இருவரும் நேற்று முன்தினம் அண்டைவீட்டுக்கார் ஒருவரின் திருமணத்துக்கு (wedding) சென்றுள்ளனர்.
அங்கு திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களும், நண்பர்களும் பாடலுக்கு நடனமாடி மகிழ்ச்சியாய் இருந்ததைப் பார்த்து உற்சாகமடைந்த ஷர்மிளாவும் அவர்களுடன் சென்று நடனமாடியுள்ளார்.
இதனைப் பார்த்த அவரது கணவர் ராமச்சந்திர சிங் ஆத்திரமடைந்துள்ளார். திருமணம் முடிந்த பின்னர் இருவரும் வீட்டுக்கு திரும்பிய நிலையில், ராமச்சந்திர சிங், மனைவி ஷர்மிளாவிடம் திருமணத்தில் நடனமாடியது குறித்து கேட்டு அவரை கடுமையான சொற்களால் திட்டியுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ராமச்சந்திர சிங் மனைவி ஷர்மிளாவை சரமாரியாக அடித்து, உதைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஷர்மிளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதையடுத்து அருகிலிருந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் ஷர்மிளாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதையடுத்து, ஷர்மிளாவின் கணவர் ராமசந்திர சிங்கை கைது செய்த காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.