கிருஷ்ணகிரி அருகே தொடர் தொல்லை கொடுத்து வந்த முன்னாள் காதலனை புதிய காதலன் மூலம் இளம்பெண் தீர்த்துக்கட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை அடுத்த பெரியதக்கேப்பள்ளியை சேர்ந்தவர் கார்த்திக் (30), டிரைவரான இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். போத்திநாயனப்பள்ளியில் உள்ள இவரது விவசாய நிலத்தில் ஆடுகளையும் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி இரவு ஆடு வளர்க்கும் இடத்திற்கு சென்று உறங்கிய கார்த்தி மறுநாள் காலை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கார்த்தியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில கொலைக்கான திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த, 2ம் தேதி இரவு, கிருஷ்ணகிரி அடுத்த பழையூரை சேர்ந்த புவனேஸ்வரி(22) என்பவர் மொபைலிலிருந்து, தர்மபுரி மாவட்டம் மதிகோண்பாளையத்தை சேர்ந்த தனியார் மருந்தக பணியாளர் தினேஷ்குமார் (25) என்பவருக்கு அடிக்கடி போன் வந்ததும், அவரது மொபைல், கொலை நடந்த இடத்திற்கு அருகே வந்து சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது.
Also Read : திருவண்ணாமலை கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த நடிகை அமலா பால்..!!
இதையடுத்து தினேஷ் குமாரை பிடித்து விசாரித்தபோது கார்த்திக்கை கொலை செய்தததை தினேஷ் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது :
தானும், புவனேஸ்வரியும் கடந்த ஓராண்டாக காதலித்து வருகின்றோம். அதற்கு முன் புவனேஸ்வரிக்கு கார்த்திக்குடன் பழக்கம் இருந்துள்ளது. என்னுடன் காதல் ஏற்பட்ட பிறகு கார்த்திக்குடன் பழகுவதை புவனேஸ்வரி நிறுத்தியுள்ளார். இருப்பினும் கார்த்திக், புவனேஸ்வரிக்கு அடிக்கடி போன் செய்து தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து புவனேஸ்வரி, தன்னிடம் கூறி அழுதார் இதனால் ஆத்திரமடைந்த நான் கார்த்திக்கை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன் . புவனேஸ்வரியிடம் கார்த்திக்கிடம் பேசி தனியாக இருக்கும் இடத்திற்கு வரவழைக்க சொல்லியதாகவும், அதன்படி கார்த்திக்கும் கடந்த, 2ம் தேதி இரவு தன் விவசாய நிலம் உள்ள போத்திநாயனப்பள்ளி விவசாய நிலத்திற்கு வந்தார். அப்போது அங்கு சென்ற நான், தூங்கிய கார்த்திக்கை இரும்பு ராடால் அடித்து கொன்றதாகவும், தடயங்களை மறைக்க கொட்டகையில் இருந்த பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்ததாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து கொலை செய்த தினேஷ்குமார், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது காதலி புவனேஸ்வரி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் .