கிரிக்கெட் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை வேட்பாளராகத் தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது.
பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டமன்றத் தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி புதிய சாதனை படைத்து, பஞ்சாப்பில் 10 ஆண்டு காலமாக ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் சிங் பஞ்சாப் முதல்வராக நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் கிரிக்கெட் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை வேட்பாளராகத் தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாபில் பெரும்பான்மை பலத்தைப் பெற்று ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் இருந்து ஹர்பஜன்சிங்கை மாநிலங்களவைக்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாபில் காலியாக உள்ள 5 மாநிலங்களவை பதவிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.