அயோத்தி வழக்கில் மத்திய அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி அப்துல் நஷீரை தற்பொழுது ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக நியமித்திருப்பது புதிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாகவே எதிர்க்கட்சியாலும் மாநில அரசுகளுக்கும் ஆளுநருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது.தமிழ்நாடு தெலுங்கானா கேரளா என இந்த பட்டியலில் நீண்டு கொண்டே செல்கிறது.
ஆளுநர் விவகாரம் தொடர்பாகச் சர்ச்சையைத் திருப்பி வரும் நிலையில் நேற்று 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஆளுநர் அதிகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டு வரும் சூழ்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதியை ஆளுநராக நியமித்தது புதிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு அரசியல் அமைப்பு பதவிகளுக்கு பல்வேறு விதமான கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் அமைந்துள்ளது.முக்கியமாக வழக்குகளில் மத்திய அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியதன் பலனாகவே ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்குப் பதவி வழங்கப்படுகிறது என்று கருத்து கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த கருத்திற்கு வலு சேர்க்கும் விதமாக முக்கியத்துவ வாய்ந்த சர்ச்சையான வழக்குகளுக்கு மத்திய அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி தற்பொழுது ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அயோத்தி முத்தலாக் மதிப்பிழப்பு போன்ற வழக்குகளில் மத்தியஅரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீர். உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்த இவர் கடந்த ஜனவரி 4ஆம் தேதி ஓய்வு பெற்ற ஒரே மாதத்தில் இவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த 5 ஐந்து நீதிபதிகளில் மூன்று பேர் ஓய்வு பெற்ற பிறகு மத்திய அரசு வழங்கிய பதவிகளைப் பெற்றிருப்பது தான்.
அயோத்தி வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கிய அமர்வைத் தலைமை தாங்கிய ரஞ்சன் காய் ஓய்வு பெற்ற பிறகு மாநிலங்களவை உறுப்பினராகி உள்ளார். இரண்டாவது நீதிபதியாக அவர்கள் அமர்ந்த அசோக் பூஷன் 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு தேசிய நிறுவன சட்ட மேல்முறையீடு நீர் காயத்தின் தலைவராகப் பதவியேற்றார்.
தற்பொழுது ஆந்திர மாநில ஆளுநராக அப்புல் நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். சுதந்திர இந்திய வரலாற்றில் நான்காவது முறையாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆளுநராகப் பதவியேற்று உள்ளார். மேலும் இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.