france : பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்புக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பினர் குரல் எழுப்பி வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு ஆதவராவாக அந்நாடு அதிபரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பெண்கள் கருக்கலைப்பு என்பது உலகம் முழுவதும் அவரவர் நாட்டு மக்கள் மன நிலைக்கு ஏற்றவாறு மாற்று கருத்துக்கள் நிலவி வருகிறது . இது தொடர்பாக 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு வழக்கில் கருக்கலைப்பு அடிப்படை உரிமை இல்லை என்று தீர்ப்பு வழங்கபட்டது .
அமேரிக்க அரசின் இந்த தீர்ப்புக்கு பல தரப்புகள் கடுமையான எதிர்ப்பை காட்டி வந்தனர். இந்நிலையில் தற்போது பிரான்சில் கருக்கலைப்புக்கு ஆதரவாக அந்நாட்டில் உள்ள பெண்கள் அமைப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர் .
இதையடுத்து கருக்கலைப்பு என்பது அவரவர் தார்மீக உரிமை என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆதரவாக பேசியுள்ளார் .
இதன் காரணமாக அந்நாட்டில் பெண்கள் கருக்கலைப்புக்கு அங்கீகாரம் அளித்து அடிப்படை உரிமையாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
Also Read :https://itamiltv.com/cctv-cameras-should-be-installed-in-pharmacies/
கருக்கலைப்பு செய்வதும் செய்யாமல் இருப்பதும் அவரவர் உரிமை அதை யாரும் தவறென சொல்ல முடியாது என்பதால் கருவுற்று 14 வாரங்களுக்கு அதனை கலைக்க விரும்பினால் அதனை செய்துகொள்ளலாம் என பிரான்ஸ் நாடு பிரகடனம் செய்துள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை (france) வழங்கும் இதற்கான மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது இந்த மசோதாவுக்கு சுமார் 780 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.