Abudhabi Mandir | அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோவிலான சுவாமி நாராயண் கோவிலை இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு 2 நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட (பிப் 13) ஆம் தேதி அபுதாபி சென்றடைந்தார்.
அப்போது அவரை ஐக்கிய அரபு அமீரக அதிபர் கட்டியணைத்து வரவேற்றார். பிறகு பிரதமர் மோடிக்கு அரசு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இரு நாடுகள் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பின்னர் அபுதாபியில் நடந்த அஹ்லன் மோடி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமீரக வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.
இன்று பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பின்னர் துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராக மோடி கலந்துகொள்கிறார்.
இதனையடுத்து மாலை பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
அதனை தொடர்ந்து அபுதாபி இந்து கோவிலில் காலையில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.
மேலும் கோயிலுக்குள் சென்று கட்டுமானங்களை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பூஜையிலும் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார்.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1757631741659943160?s=20
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயில்(Abudhabi Mandir):
900 கோடி ரூபாய் செலவில் 7 கோபுரங்களுடன், நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கலைநயத்துடன் இறுதி வடிவம் பெற்றுள்ளது.
இது அந்நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக் குறிப்பது மட்டுமல்லாமல்,
இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடியின் ஏழாவது முறையாக ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.
கடந்த எட்டு மாதங்களில் இது மூன்றாவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.