கன்னியாகுமரியில் சில்மிஷ பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ (Priest Benedict Anto) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் மருமகள் ஆகியோரிடம் வாட்ஸ் அப்பில் சேட்டிங் செய்ததாகவும், இன்னும் இரு வாரங்களில் இது குறித்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் நழுவாமலும், மழுப்பாமலும் விரைவாக பதில் தருகிறாராம் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ. 15 நிமிடத்தில் விசாரணை முடிந்து விட்டதாக கூறி மீண்டும் பாதிரியாரை சிறையில் அடைத்து உள்ளனர் சைபர் கிரைம் போலீசார்.
நீங்கள் பார்க்கும் இந்த போட்டோவில் இருப்பது என்னுடைய முன்னாள் காதலி என்றும், நாங்கள் இருவரும் காதலித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் இவை என்றும், நான் பாதிரியார் ஆனதால் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம் என காவல்துறையினர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் யோசிக்காமல் சட்டென பதில் கொடுத்து பதற வைத்திருக்கிறார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ (Priest Benedict Anto). இவரின் லேப்டாப் மற்றும் செல்போன் திருடப்பட்டு அதிலிருந்து சில பெண்களுடன் பாதிரியார் இருக்கும் ஆபாச புகைப்படங்களும், வாட்ஸ் அப் சேட்டிங்கும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே, இளம்பெண் ஒருவர் தன்னிடம் பாதிரியார் தவறாக நடந்து கொண்டதாகவும், ஆபாச நோக்கில் வாட்ஸ் அப்பில் சேட்டிங் செய்ததாகவும் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து தலைமறைவான பாதிரியாரை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவரை அதிரடியாக கைது செய்தனர்.
இதில், நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சைபர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், எந்த ஒரு தயக்கமும் இன்றி கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் படபடவென பதில் கொடுத்து இருக்கிறார் பாதிரியார்.
இந்நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மகள், தாய் மற்றும் மருமகளிடம் வாட்ஸ் அப்பில் பாதிரியார் சேட்டிங் செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
பாதிரியார் அளித்த வாக்குமூலங்களை எல்லாம் இன்னும் இரு வாரங்களில் குற்றப்பத்திரிக்கையாக சமர்ப்பிக்க உள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாதரியாரின் லேப்டாப் மற்றும் செல்போன் திருடிய இருவரில் ஒருவரை கைது செய்துள்ள நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் தலைமறைவாக உள்ள ஒருவரிடம் தான் பாதிரியாரின் செல்போன் சிக்கி இருப்பதாகவும், அவர் கேரள மாநில எல்லை அருகே தலைமறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
அவரை கைது செய்த பின்னர் தான், பாதிரியாரை சிறையில் இருந்து வெளியில் எடுத்து அடுத்த கட்ட விசாரணைக்கு செல்ல முடியும் எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம், பாதிரியார் விவகாரம் வெளியாகி பூதாகரமான நிலையில், பெனட்டிக் ஆன்டோ என்ற பெயரில் யூடியூப் (you tube) பக்கம் ஒன்று புதிதாக துவங்கப்பட்டு அவர் குறித்த மீம்ஸ் காமெடிகளும், காமெடி கலாட்டாக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.