பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு வீடு என்பது பிரிவினையை உண்டாக்குகிறது என்று திருச்சியில் நடிகர் ஹரிஷ்கல்யாண்(Harish Kalyan )தெரிவித்துள்ளார்.
தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சிறார்-2023 என்ற தீபாவளி நிகழ்ச்சி திருச்சி ஜங்சன் பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் 1000 குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.இதில் திரைப்பட நடிகர் ஹரிஷ்கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
தொடந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்..
டிசம்பர் 1ல் பார்க்கிங் திரைப்படம் வெளிவர உள்ளது. அதனை தொடர்ந்து ரப்பர்பந்து , டீசல் போன்ற படங்கள் வர உள்ளன. டீசல் திரைப்படம் என் வாழ்நாளில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட முதல் ஆக்சன் திரைப்படம்
பிக் பாஸ் குறித்த கேள்விக்கு..
இதுவரை பார்த்ததை விட இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி வித்யாசமாக உள்ளது. இரண்டு வீடு என்பதால் நிறைய வாக்குவாதம் சண்டைகள் பிரச்சினைகள் வரும், காரணம் இவர்கள் சமைக்க வேண்டும் நீங்கள் இங்கே இருக்க வேண்டும் என கூறுவதால் பிரிவினையை உண்டாக்குகிறது. இது தான் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் இதை மக்கள் விரும்பி பார்க்கின்றனர்.
ஹேப்பி ஸ்ட்ரீட் சமுதாய சீரழிவு என நடிகர் ரஞ்சித் கூறி உள்ளார்.இது குறித்து கேட்ட கேள்விக்கு எனக்கு தெரியாது என தெரிவித்தார்.