பிரபல கன்னட நடிகர் நிதின் கோபி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்த நிதின் கோபி பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு வயது (39). இந்நிலையில், நிதின் கோபி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஷ்ணுவர்தன் நடித்த ‘ஹலோ டாடி’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான நிதின் கோபி திரையுலகில் பிரபலமான புல்லாங்குழல் வாசிப்பாளரான கோபியின் மகன் ஆவார்.
இவர், கேரளித கேசரி, முத்தினந்த ஹெண்டதி, நிஷ்யப்தா, சிரபாந்தவ்யா உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், பல சின்னத்திரை தொடர்களில் நடித்ததுள்ளார்.
பெங்களூரில் உள்ள இட்டமடு பகுதியில் தன் பெற்றோருடன் வசிந்து வந்த நிதின் கோபி, நேற்று வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். ஆனால், அவர் வரும் வழியிலயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
39 வயதே ஆன நிதின் கோபியின் திடீர் மரணம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவரது மறைவிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.