நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது பூர்ண நலம் பெற்று வீடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயிலர் படத்தின் அட்டகாச வெற்றிக்கு பின் நடிகர் ரஜினிகாந்த தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
Also Read : நடிகர் நிவின் பாலியிடம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை..!!
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார் .
ரஜினிகாந்திற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த வீக்கத்தை, அறுவை சிகிச்சை இல்லாமல் TRANSCATHETER முறையில் வெற்றிகரமாக சரி செய்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அவரின் ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .