நடிகர் சிவகார்த்திகேயன் (sivakarthikeyan) சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
கல்லூரி காலத்தில் கலை நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்வது, மிமிக்ரி செய்வது என இருந்த சிவகார்த்திகேயன், நண்பர்களின் அறிவுறுத்தலில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது குறும்படங்களை எடுத்து வந்த அட்லியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சில குறும்படங்களில் நடித்திருக்கிறார். மிமிக்ரி, ஷார்ட் பிலிம் என தொடங்கிய சிவகார்த்திகேயன் பின்னர் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.
2008ல் இயக்குனர் ராஜசுந்தரம் இயக்கத்தில் வெளியான ஏகன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால் படம் வெளியாகும் போது சிவகார்த்திகேயனின் (sivakarthikeyan) காட்சிகள் இடம்பெறவில்லை. இதனை தொடர்ந்து வெளியான திரைப்படம் தான் மெரினா.
https://x.com/ITamilTVNews/status/1753648031034179866?s=20
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியது.
இந்த படத்திற்கு பின்னர் 3, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை டாக்டர் என படத்தின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் அயலான். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க : yathra-2 டிரைலர் -ஆந்திர முதல்வராக ஜீவா
மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன், தொலைக்காட்சி தொகுப்பாளர், டான்ஸர் பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என தன்னை நிருபித்துள்ளார்.
இப்படி பல்வேறு பரிணாமங்களை அடைந்த நடிகர் சிவகார்த்திகேயன் திரையுலகில் ஹீரோவாக களமிறங்கி இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.
தற்போது வரை 20 படங்கள் நடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவரது 21வது படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் AR முருகதாஸுடன் அவரது 23வது படத்திற்காக இணைகிறார்.