மாமன்னன்(Maamannan) படம் இல்லை உங்கள் வாழ்க்கையில் கண்ட வலி என மாரிசெல்வராராஜை நடிகர் சிவகுமார் மாமன்னன் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் கடந்த ஜூன் 8 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ‘மாமன்னன்(‘Maamannan) வடிவேலு, பக்த பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் படமாக மாமன்னன்(Maamannan) அமைந்திருந்தது. மேலும் மக்கள் மத்தியில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியது.
சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்ததோடு, உலகளவில் 1.2 மில்லியன் பார்வைகளைக் குவித்து சாதனை படைத்தது.
மேலும் இந்த படத்தில் ரத்தினவேலு என்ற கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடித்திருந்தார்.இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ரத்தினவேல் கதாபாத்திரம் சாதிய பெருமைகளை வெளிப்படுத்தும் விதமாக இணையத்தில் விடியோக்களை பதிவிட்டு அதற்கேற்ப பாடல்கள் பதிவிட்டு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வந்தது. இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த படத்தைப் பார்த்த ரஜிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துப் பாராட்டியிருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் சிவகுமாரும் பாராட்டி இருந்தார்.இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது,தம்பி மாரி செல்வராஜுக்கு! மாமன்னன் திரைப்படம் பார்த்தேன். இது படமில்லை. உங்கள் வாழ்க்கையில் கண்ட வலி. பாதிக்கப்பட்டவன்தான் இவ்வளவு ஆழமாகச் சொல்ல முடியும்.
திரைப்படம் மூலம் இன்னும் நீங்கள் சொல்ல வேண்டிய செய்தி நிறைய உள்ளது. உங்களையும் வடிவேலுவையும் சந்தித்து ஆரத்தழுவ எண்ணுகிறேன். விரைவில் சந்திப்போம் எனத் தெரிவித்து இருந்தார்.