பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்க்கு நடிகர் விஜய்(ActorVijay ) தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் இன்றுதனது 55 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மேலும் பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்,இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பாமக நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பிறகு அதன் அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்க்கு நடிகர் விஜய் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.