தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அசின், அவரது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு,கன்னடா ,இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அசின். இவர் மோகன் ராஜா இயக்கிய எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார்.
இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார் அசின். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.இதனால் அசினுக்கு அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் வர ஆரமித்தது.
2005-ம் ஆண்டு விஜய் ஜோடியாக சிவகாசி, சூர்யாவின் கஜினி, விக்ரமுடன் மஜா, ஜீவா இயக்கிய உள்ளம் கேட்குமே என அசின் நடிப்பில் வெளிவந்த 4 படங்களுமே அமோக வெற்றியை பெற்றது.
இதனை தொடர்ந்து வரலாறு, போக்கிரி, வேல், தசாவதாரம் என தமிழில் நடிகை அசின் நடித்த படங்கள் ஹிட் கொடுத்தது.மேலும் ஹிந்தியிலும் சல்மான் கான், ஆமீர் கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.
இந்த நிலையில் 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த பிறகு சினிமாவை விட்டு அசின் விலகினார்.இந்த ஜோடிக்கு அரின் என்ற பெண் குழந்தை உள்ளது.
தற்பொழுது திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், ராகுல் சர்மாவும் அசினும் தற்போது விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராகுல் சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், இதற்கு அசின் எச்சரிக்கை விடுத்ததாகவும் ஆனால் ராகுல் சர்மா கேட்காததால் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.