தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன். முன்னணி இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்சியின் மகளான இவர் முதன்முதலில் தெலுங்கில் நடிகையாக அறிமுகமானார் .
இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயககியாக அறிமுகமானார். பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/06/image-569.png?resize=1024%2C808&ssl=1)
இதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற Hridhayam படத்தில் கதாநாயகியாக நடித்து இன்றைய தலைமுறையின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துவிட்டார் .
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/06/image-568.png?resize=686%2C386&ssl=1)
அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக வலம் வரும் கல்யாணி தற்போது 2 மலையாள படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் ஆண்டனி.
ஜோஷி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத், விஜயராகவன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் .
இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று இப்படத்தின் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சி ஒன்றில் விபத்து ஏற்பட்டு அதில், நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு அடிபட்டுள்ளது. உடம்பில் காயத்துடன் இருக்கும் அந்த புகைப்படத்தை நடிகை கல்யாணி தனது சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/06/image-567.png?resize=579%2C324&ssl=1)