Actress Kasthuri-திமுகவுக்கு எதிரான சக்திகள் ஒன்றுபடாத வரை தமிழகத்துக்கு விடிவில்லை என்று நடிகை கஸ்தூரி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
1991ல் தமிழ் சினிமாவில் ஆத்தா உன் கோயிலிலே திரைப்படம் வழியே தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை கஸ்தூரி. 1992ல் மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியில் வென்றதன் மூலம் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தன.
பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் கஸ்தூரி. 65க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள கஸ்தூரி, டிவி தொடர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைகாட்டி இருக்கிறார்.
அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட கஸ்தூரிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சமீப காலமாக நடிகை கஸ்தூரி சமூக ஆர்வலராக தலையெடுத்து பெண்களுக்காக குரல் கொடுப்பது தொடங்கி அரசியல் முதல் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
இதன் காரணமாக சில சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.இந்த நிலையில் தனது எக்ஸ் தளத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவர் பதிவிட்டுள்ளது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: ”திமுக-வை புகழ்ந்து பேசிய கஸ்தூரி..”சட்டென கிளம்பிய அர்ஜுன் சம்பத்!
திமுக வின் ஆட்சி, பணம், ஊடக பலத்தை முறியடிக்கும் வகையில் பாஜக, அதிமுக, நாதக மூவரும் கரம் கோர்த்து அடிப்பார்கள் என்று ஆசைப்பட்டால்… ஒருத்தர் மாற்றி ஒருத்தர் அவர்களே அடித்துக்கொள்கிறார்கள்.
என்னத்த சொல்லுறது. திமுகவுக்கு எதிரான சக்திகள் ஒன்றுபடாத வரை தமிழகத்துக்கு விடிவில்லை.
என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கு திமுகவினர் தரப்பில் கடும் ரியாக்ஷன்கள் கிளம்பி இருக்கிறது.