பிக் பாஸ் புகழ் நடிகை வனிதா அதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்ட் வாங்கி வெளியான நடிகர் ஆண்டனியின் ஆதரவாளர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக புகைப்படத்துடன் கூடிய அதிர்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் சம்பவங்கள் விமர்சனம் கூறிவரும் நடிகை வனிதா வழக்கம் போல் தனது விமர்சனத்தை வீடியோவாக பதிவு செய்துவிட்டு இரவு வீடு திரும்ப இருந்ததாக கூறப்படுகிறது.
வனிதா காரின் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென வந்து வனிதாவை கடுமையாக தாக்க துவங்கினார். ‘ரெட் கார்டு கொடுக்குறீங்களா, நீ வேற அதுக்கு சப்போர்ட்’ என கூறி வனிதாவின் முகத்தில் அந்த நபர் கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.
இந்நிலையில் தன்னை தாக்கிய அந்த மர்ம நபர் யார் என்று எனக்கு தெரியவில்லை என்றும் அவர் என்னை பார்த்து பைத்தியகாரன் போல் சிரித்தான் என தெரிவித்துள்ள வனிதா அடுத்த சில நாட்களுக்கு நான் ஆன் ஸ்க்ரீனில் வரப்போவதில்லை. இடையூறுகளை ஆதரிப்பவர்களுக்கு ஆபத்து ஒரு அடி தூரத்தில் உள்ளது” என கூறி பதிவு செய்துள்ளார்.