நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகனின் செல்போனை ஆராய்ந்து பாருங்கள். சீமான் எனக்கு 50,000 டெபாசிட் செய்தது, என்னுடன் பேசியதெல்லாம் வெளிச்சத்துக்கு வரும் என நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.
சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு, தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ல் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் தற்போது விசாரணைக்கு வந்த அந்த புகாரை தன்னால் போராட முடியவில்லை என கூறி வாபஸ் பெற்றுவிட்டார்.
இருந்தாலும் இந்த விவகாரம் தொடர்பாக சீமானுக்கு ஏற்கெனவே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்த நிலையில், இன்று தன் மனைவி கயல்விழியுடன் சீமான் சீமான் ஆஜரானார். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் விசாரணை நிறைவடைந்தது.
இதையடுத்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்..
“2 பெண்களால் நான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன். 13 ஆண்டுகளாக வழக்கு போட்டு என்னை வன்கொடுமை செய்தனர். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய வீரலட்சுமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
நான் விஜயலட்சுமியை திருமணம் செய்து கொண்டதாகத்தான் புகார் அளித்தார்கள். ஆனால் இப்போது ரூ 60 லட்சம் பணம், நகையை நான் பெற்றுக் கொண்டதாக சொல்கிறார்” என சீமான் கூறினார்.
அதையடுத்து, சீமானுக்கு பதிலடியாக வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி கூறுகையில்..
“சீமான் மீது நான் கூறிய புகார்களை நிரூபிப்பேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாலியல் புகார்களை வேண்டுமானால் என்னால் நிரூபிக்க முடியாமல் போகலாம். ஆனால் மற்ற விஷயங்களை எல்லாம் என்னால் நிரூபிக்க முடியும். வீரலட்சுமியின் வீட்டிலிருந்து நான் வெளியேறிய போது சாட்டை துரைமுருகனிடம் பேசினேன்.
அப்போது தம்பி சாட்டை துரைமுருகன் தான் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியனை அனுப்பி வைத்தார். நான் இரு நாட்கள் டைம் கேட்ததற்கு கூட அவர் இரவோடு இரவாக நீங்கள் கிளம்பிப் போக வேண்டும் என கூறினார்.
புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டு அக்காவுடன் பெங்களூருக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தார் சாட்டை துரைமுருகன். என் வங்கிக் கணக்கில் ரூ 50 ஆயிரம் போட்டுள்ளார்கள். அவருடைய போனை ஆராய்ந்தாலே சீமான் என்னுடன் என்னென்ன பேசியுள்ளார் என தெரிய வரும்.
நான் சாட்டையுடன் நடத்திய சாட்டுகளை எல்லாம் தேவைப்பட்டால் போலீஸிடம் காட்டுவேன். சீமான் என் மீது மான நஷ்ட ஈடு வழக்கு போட்டாலும் நான் ஆதாரத்தை காட்டுவேன். என்னை பொய் சொல்லும் பெண்ணாக சித்தரித்தால் இந்த மோதல் முடிவுக்கே வராது” என கடுமையாக பேசியுள்ளார்.