மக்களவையில் அதானி, அம்பானியை A1, A2 எனக் குறிப்பிட்டு எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்.
அம்பானி, அதானி என்ற பெயரை சொல்லக்கூடாது என சபாநாயகர் கூறியதால் ஏ1 ஏ2 என ராகுல் குறிப்பிட்டார்.
தொலைதொடர்பு, துறைமுகம் போன்றவற்றை அம்பானி, அதானியிடம் கொடுத்திருக்கிறார்கள்.
தற்போது ரயில்வே துறையையும் சிலரிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு எதிர்ப்பு.
மகாபாரதத்தில் அபிமன்யூ சக்கர வியூகத்தில் சிக்கியது போல, பாஜக உருவாக்கி உள்ள சக்கர வியூகத்தில் இந்திய மக்கள் தற்போது சிக்கி உள்ளனர் – ராகுல் காந்தி.
சக்கர வியூகத்தை துரோணர், அஸ்வத்தாமன் அமைத்தது போல் தற்போது மோடி, அமித் ஷா புதிய சக்கர வியூகத்தை அமைத்துள்ளனர் – பட்ஜெட் மீதான விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேச்சு.
பட்ஜெட் அல்வா நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு கிடைக்கவில்லை; இந்தியாவின் பட்ஜெட் 30 அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டது.
30 பேரில் 2 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட அதிகாரிகள்- ராகுல் காந்தி.
வீடு, மனை உள்ளிட்ட சொத்துகளை விற்கும்போது அதிக வரி விதிப்பது நடுத்தர மக்களின் முதுகில் குத்துவது போன்றது.
நீண்ட கால முதலீட்டு லாபங்களுக்கான வரியை உயர்த்தியிருப்பது நடுத்தர மக்களின் நெஞ்சில் குத்தும் செயல்.
10 ஆண்டுகளில் 70 முறை போட்டித் தேர்வு வினாத்தாள்கள் கசிவு; அது பற்றி பட்ஜெட்டில் ஒரு வார்த்தைக்கூட இல்லை.
கடந்த 20 ஆண்டுகளில் கல்விக்கு குறைவான அளவில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
நாடு முழுவதும் அனைத்து விஷயங்களிலும் மக்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டுள்ளது; விவசாயிகள், இளைஞர்கள், பாஜகவில் உள்ள சில தலைவர்களே பயத்துடன் உள்ளனர்.