பெருமாளை அடைந்த ஆண்டாள் :
ஆடி மாதத்தில் வரக்கூடிய பூர நட்சத்திரம் உச்சம் பெறக்கூடிய நாள் ஆடிப்பூரம் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 2021 ஆகஸ்ட் 11 ம் தேதி, ஆடி 26ம் தேதி ஆடிப்பூரம் திருநாள் கொண்டாடப்பட உள்ளது.
பொதுவாக ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக திருவிழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.பெருமாளை அடைந்த ஆண்டாள் :
ஆடி மாதத்தில் வரக்கூடிய பூர நட்சத்திரம் உச்சம் பெறக்கூடிய நாள் ஆடிப்பூரம் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 2021 ஆகஸ்ட் 11 ம் தேதி, ஆடி 26ம் தேதி ஆடிப்பூரம் திருநாள் கொண்டாடப்பட உள்ளது.
பொதுவாக ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக திருவிழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆம் ஆண்டாள் அவதரித்த இடம் ஸ்ரீவில்லிபுத்தூர். ஆண்டாள் மனிதர்களைப் போல வயிற்றில் பிறக்கவில்லை. அவர் பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருந்த பெரியாழ்வாருக்கு துளசி செடிக்கு அடியில் ஆண்டாள் சிசுவாக கிடைத்தாள்.
அவளை அன்போடும், பண்போடும் வளர்த்து வந்தார் பெரியாழ்வார். அவர் விடியற்காலையில் பூக்களைப் பறித்து மாலைகளைத் தொடுத்து பெருமாளுக்காக அளிப்பது வாடிக்கையாக வைத்திருந்தார்.
ஆனால் ஆண்டாளோ பெரியாழ்வார் தொடுக்கும் மாலைகளை தான் முதலில் அணிந்து பார்த்த பின்னரே பெருமாளுக்கு அளித்தார். இதை ஒரு நாள் கண்டுவிட்ட பெரியாழ்வார் ஆண்டாள் மீது கடிந்து கொண்டார். இறைவனிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார்.
அன்று இரவு இறைவன் பெரியாழ்வாரின் கனவில் வந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே தனக்கு வேண்டும் என்றார். உடனே கனவிலிருந்து விழித்த பெரியாழ்வார், ஆண்டாள் சாதாரண குழந்தை அல்ல, அவள் தெய்வக்குழந்தை என புரிந்து கொண்டார்.
பின்னர் ஆண்டாள் மண வயதை அடைந்ததும், எம்பெருமானின் கட்டளைப்படி ஸ்ரீரங்க அழைத்துச் செல்ல, அங்கு ஸ்ரீ ரங்கநாதரிடம் ஒளியாய் சேர்ந்து கொண்டாள்.