ஆதித்யா எல்-1(aditya-l1)சூரியனை நோக்கி தனது வெற்றிகரமான பயணத்தில் அடுத்த 110 நாட்களுக்கு பிறகு பூமிக்கும்-சூரியனுக்கும் இடையிலான எல்-1 புள்ளியில் இது நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பின் தனது அடுத்த இலக்கான சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 02ம் தேதி பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கல விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது .
இதனை தொடர்ந்துசெப்டம்பர் 15 ஆம் தேதி ஆதித்யா எல்.1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் நான்காவது சுற்றுவட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்டது.இதனை தொடர்ந்து,ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி வட்டப் பாதை 5ஆவது முறையாக இன்று அதிகாலை உயர்த்தப்பட்டது.
மேலும் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து சரியாக 648 கி.மீ உயரத்தில் பிரிக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
அதன்படி ஆதித்யா எல்-1சூரியனை நோக்கி தனது வெற்றிகரமான பயணத்தில் அடுத்த 110 நாட்களுக்கு பிறகு பூமிக்கும்-சூரியனுக்கும் இடையிலான எல்-1 புள்ளியில் இது நிலைநிறுத்தப்படும் என்றும் அறிவியல் பூர்வமான தரவுகளை ஆதித்யா எல்-1 சேகரிக்கத் தொடங்கியதாகவும்,
அதில் உள்ள STEPS கருவி மூலம் அதிவெப்ப ஆற்றல்,அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிட தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்