சூரிய வெடிப்பு தொடர்பாக ஆதித்யா எல் ஒன் விண்கலம் எடுத்த புகைப்படங்களை ( Aditya L1 ) இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நம் நாட்டின் பெருமையாக கருதப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பின் தனது அடுத்த இலக்கான சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.
இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கல விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது .
சூரியனின் சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ள இந்த விண்கலம் , அங்கு சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், உள்ளிட்ட பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இஸ்ரோவின் தொடர் கண்காணிப்பில் இருக்கும் ஆதித்யா எல்.1 விண்கலம் விண்கலம் தற்போது முக்கிய தகவலை இஸ்ரோவுக்கு அனுப்பி உள்ளது.
கடந்த மே 10 முதல் 12ம் தேதி இடையே சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை படம் எடுத்த ஆதித்யா எல்.1 விண்கலம் அதனை இஸ்ரோவுக்கு அனுப்பியுள்ளது . இந்த புகைப்படங்களை ஆய்வு செய்த இஸ்ரோ தற்போது அதன் ( Aditya L1 ) புகைப்படங்களை வெளியிட்டுள்ளது .