RTE 2024 – 25 : தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ், 25 சதவிகித இடஒதுக்கீட்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் சேரும் நலிவடைந்த மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை சார்பில் கல்விக் கட்டணம் செலுத்தப்படும்.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசால் ரூ.400 கோடி தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான 25% இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : April 22 Gold Rate : அதிரடியாக குறைந்தது தங்கம் விலை! குஷியில் நகை பிரியர்கள்!
RTE 2024 – 25 : விதிமுறைகள் :
LKG வகுப்பில் சேர்க்கப்படும் குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல், 2021 ஜூலை 31ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படும் குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல், 2019 ஜூலை 31ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்றுகளுடன் இதற்க்கு விண்ணப்பிக்கலாம்.
https://rte.tnschools.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப்பதிவு வெற்றிகரமாக முடிந்ததும், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், வட்டார வள மைய அலுவலகங்கள், தகுதியான விண்ணப்பம் ஏற்கப்பட்ட விபரத்தையும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்காக விபரத்தையும் மே 27ம் தேதி இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகமான விண்ணப்பங்கள் இருக்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் மே 28ம் தேதி குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.