கொடைக்கானலில் விபத்தில் உயிரிழந்த காவலரின் உடலை மாவட்ட எஸ்.பி. மற்றும் ஏடிஎஸ்பி உள்ளிட்டோர் தோளில் தூக்கி சுமந்து சென்று இறுதி சடங்கு செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விபத்தில் உயிரிழந்த காவலரின் உடலை மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன், ஏடிஎஸ்பி லாவண்யா மற்றும் காவல்துறையினர் தோளில் தூக்கிச் சென்று இறுதி சடங்கு செய்தனர்.
காவலர் விபத்துக்குள்ளான இடத்தில் உடனடியாக சரி செய்யும் சாலைபணி நடைபெற்று வருகிறது.